கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம போராட்ட களம் மற்றும் காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோ கோட்ட கம போராட்ட களம் ஆகியவற்றின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலில் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர், அரசாங்கத்தின் துணையுடன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கும் குண்டர்களின் செயற்பாடு மிகுந்த கண்டனத்திற்குரியது. சட்டத்தின் ஆட்சி எங்கே? பொலிஸ் என்ன செய்கிறது? என தெரிவித்துள்ளார்.