நாட்டில் நேற்று (09) இடம்பெற்ற வன்முறையை அடுத்து இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 220 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இமதுவ பிரதேச சபை தவிசாளர் டீ.வி. சரத்குமாரவின் வீடு குழுவொன்றினால் நேற்றிரவு தாக்கப்பட்டமையை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு அலரிமாளிகையில் உருவான வன்முறைச் சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிகாரியொருவர் கண்ணீர்ப்புகை குண்டு பிரயோகத்தை மேற்கொள்ளும் போது அது வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய பொலிஸ் அதிகாரியே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.