இன்று(10) முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முதலாவது Km இற்கு 10 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளதாக சுய வேலைவாய்ப்பு தொழிற்சங்கங்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது முச்சக்கர வண்டிகளின் மேலதிக பாகங்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதனை கருத்திற் கொண்டு குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
முதல் Km இற்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. எனினும் இரண்டாவது Kmஇல் இருந்து வழைமையை போன்று 40 ரூபாய் என்ற கணக்கில் அறவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை முதல் Km இற்கு 50 ரூபா அறவிடப்பட்டது. இன்று முதல் 60 ரூபா அறிவிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.