• Sun. Oct 12th, 2025

மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை நிதியுதவி

Byadmin

May 25, 2022

மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை நிதியுதவிமருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் மருத்துவமனை என்பவற்றுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை நிதியுதவி அளிக்க தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் தலா ஒரு லட்சம் டொலர் வீதம் இரண்டு மருத்துவமனைகளுக்கும் இரண்டு இலட்சம் டொலர்கள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. அதன் இலங்கைப் பெறுமதி 73 கோடி ரூபாவாகும்.நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் புற்று நோயாளிகள் மற்றும் சிறுவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதற்கு வழி செய்வது அத்தியாவசியமாகும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை செயலாளர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலையில் அரச மருந்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தடடுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *