• Tue. Oct 14th, 2025

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 3 வங்காளப் புலிக் குட்டிகள் பிறந்தன – பெயர்களைப் பரிந்துரைக்க மக்களுக்கு வாய்ப்பு

Byadmin

Jun 3, 2022

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில், வங்காளப் புலி இனத்தைச் சேர்ந்த 3 புலிக் குட்டிகள், பொதுமக்களின் பார்வைக்காக கூண்டிலிடப்பட்டுள்ளன.

தெஹிவளை மிருகக்காட்சசாலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், இன்று முதல் அந்த 3 புலிக் குட்டிகளையும் பார்வையிட முடியும் என மிருகக்காட்சிசாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த 3 புலிக் குட்டிகளுக்கும் பெயர்களைப் பரிந்துரைப்பதற்கான வாய்ப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெயர்களை பரிந்துரைப்பவர்கள், தங்களது தகவல்களுடன், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வந்து கையளிக்க வேண்டும் என மிருகக்காட்சிhலை திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறின்றேல், மிருகக்கட்சிசாலையின் இணையத்தளத்தையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ பயன்படுத்தி, குறித்த 3 வங்காளப் புலிக் குட்டிகளுக்கும் பெயர்களைப் பரிந்துரைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளப் புலி இனத்தைச் சேர்ந்த இரண்டு புலிகள், கடந்த 2009ஆம் ஆண்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு முதன்முறையாக கொண்டுவரப்பட்டன.

குறித்த காலப்பதியில் சீனாவுடன் இடம்பெற்ற விலங்கு பரிமாற்றத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவற்றுக்கு கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி 3 புலிக் குட்டிகள் பிறந்தன.

தற்போது அந்த 3 குட்டிகளுக்கும் 3 மாதங்கள் ஆகின்றன.

குறித்த 3 வங்காளப் புலிக் குட்டிகளுக்கும் மிருகக்காட்சிசாலையில் விசேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திலக் ப்ரேமகாந்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *