• Sun. Oct 12th, 2025

கொள்ளை இலாபமீட்டும் பதுக்கல் வியாபாரம் ஹராமானதாகும்!

Byadmin

Jun 10, 2022

பெருந்தொற்றின் போதும் பொருளாதார நெருக்கடி

நிலையிலும் பதுக்கல் இரட்டிப்பு பாவமாகும்!

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அத்தியாவசிய பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை சந்தைக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான், மென்மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்குவான்; இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்”

அறிவிப்பவர் உமர் (ரழி)

பதிவு: இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாவியைத்தவிர வேறு யாரும் உணவுப் பொருளை பதுக்கமாட்டார்கள்.”

அறிவிப்பவர் :மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) பதிவு : முஸ்லிம்

பதுக்கல் வியாபாரியின் தீய எண்ணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அத்தியாவசிய பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான், அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான், விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சி கொள்கிறான்.”

அறிவிப்பவர்: முஅத் (ரழி)

பதிவு :பைஹகீ

அனர்த்தங்கள் கொள்ளை நோய்கள் ஒரு சோதனை பரீட்சை களமாகும், இதில் பலரும் பல்வேறு படித்தரங்களிலு சோதிக்கப் படுகிறார்கள், ஸதகா தான தர்மம் செய்யும் நல் உள்ளங்கள், நேர்மையான வியாபாரி, பகற் கொள்ளை செய்யும் வியாபாரி என இறைவனால் பிரித்தறியப் படுகிறார்கள்.

மக்களின் இன்னல்களில், அனர்ந்தங்களில், நோய் நொடிகளில், நிவாரணங்களில் கொள்ளை இலாபமீட்டுவோர் நிச்சயமாக ஈவிரக்கமற்ற கொடும்பாவிகளே!

அதேவேளை சில்லறை வியாபாரிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பெறும் இடைத்தரகர்கள் மொத்த வியாபாரிகள் பதுக்கல் வியாபாரம் செய்யும் நிலையில் எதிர் கொள்ளும் அசெளகரியங்களையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

“..மேலும் அலாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியத் தடை செய்துள்ளான்.” (ஸூரதுல் பகரா 2: 275 )

வட்டி சொந்த உழைப்பின்றி அடுத்தவனிடம் சிறிய ஒரு தொகையை பெறுவது, வியாபாரத்தில் உனது சிரமத்திற்கு, உழைப்பிற்கு உரியதை முதலீட்டிற்கு மேலதிகமாக பெறுவது தான் ஹலால் அதனால் தான் ஹலாலாக்கப்பட்டுள்ளது.

“உழைப்பில் சிறந்தது கைத்தொழிலும், நேர்மையான வியாபாரமுமாகும்.” (அஹ்மத்)

(Please Subscribe to

https://youtu.be/SMIELEaq9Po)

“நம்பிக்கை நாணயம் உள்ள நேர்மையான வியாபாரி மறுமையில் நபிமார், ஸித்தீக்குகள், ஷஹீதுகளோடு இருப்பார்.” (இப்னு மாஜா)

“ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா? ஹராமா? என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்” அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரழி)

பதிவு: புஹாரி

“வியாபாரிகளே! ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்”

அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரழி)

பதிவு: திர்மிதீ, அபூதாவூத்

“அளவையிலும் நிறுவையிலும் யார் மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு கேடுதான்; அவர்கள் மனிதர்களிடம் இருந்து அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்து விடுவார்கள்.” (83:1-3) அல்குர்ஆன்.

நேர்மையான வர்த்தகர்கள் அளவு நிறுவைகளில் மோசடி செய்ய மாட்டார்கள், பொய்கூறி வியாபாரம் செய்ய மாட்டார்கள், கலப்படம் செய்ய மாட்டார்கள், பதுக்கல் வியாபாரம் செய்யமாட்டார்கள், பங்காளிகளை ஏமாற்ற மாட்டார்கள், தருணம் பார்த்து கொள்ளை கொள்ளை இலாபமீட்ட மாட்டார்கள்.

மக்களின் நிர்கதி நிலைகளில் அவர்களின் மனிதாபிமானம் வெளிப்படும், தயாளம், தாராளத்தன்மை வெளிப்படும், சதகா சக்காத் தானதர்மங்கள் செய்வார்கள்.

உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் எமது பெற்றார், உடன் பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவினர் ஆசான்கள் அன்பிற்குரியவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

SHARE If you really CARE

*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*

✍🏻 29.08.2021 (மீள்பதிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *