• Sat. Oct 11th, 2025

காமம் தான் வாழ்க்கை ?

Byadmin

Jun 9, 2022

=============================

இந்த போஸ்ட் படிக்கும் போது முகம் சுழிக்காதீர்கள், முழுமையாக படியுங்கள் 😒😒😒

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளுடைய செல்வத்திற்காக

2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளுடைய அழகிற்காக

4. அவளுடைய மார்க்க நல்லொழுக்கத்திற்காக. எனவே, மார்க்க நல்லொழுக்கம் உடையவளை மணந்து வெற்றி அடைந்து கொள்! இல்லையேல் உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும் ✔

ஸஹீஹ் புகாரி : 5090

இதில் 4வது நோக்கத்தை நேசியுங்கள் & தேர்வு செய்துக் கொள்ளுங்கள், அதுவே சிறந்தது.

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம், ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஒரு ஆண் ஆசைப் படுகிறான் ?

* அவளோடு அன்பாக இருக்க வேண்டும்

* அவள் மீது தன் முழு காதலையும் கொட்டி தீர்க்க வேண்டும்

* அவளோடு சேர்ந்து தொழுக வேண்டும்

* அவளை கண்ணியப்படுத்த வேண்டும்

* அவளோடு சொர்க்கம் செல்ல வேண்டும்

*அளவில்லாமல் பேசி அன்பை பகிர வேண்டும், கொஞ்ச வேண்டும்

* உடலுறவில் இன்பம் காண வேண்டும்

* அவளை விட்டுக் கொடுக்காமல் வாழ வேண்டும்

* அவளை புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும்

* அவளோடு குட்டி குட்டி சண்ட போட்டு பின்பு சமாதானம் செய்ய வேண்டும்

* இதுபோல நிறைய ஆசைகள் இருக்கும், நான் சொன்னது கொஞ்சம் தான்

நான் மேல் கூறிய ஆசையெல்லாம், ஒரு பெண்ணை மதிக்க தெரிந்த, ஒரு பெண் மீது உண்மையான அன்பை வைக்கும், ஈமான் கொண்ட ஆணுடைய ஆசைகள்.

ஆனால் சில ஆண்கள் காமத்தை (sex) மட்டும் விரும்பி திருமணம் செய்துக் கொள்கின்றீர்கள்…. திருமணம் முடிந்த அன்று இரவே இல்லறத்தில் ஈடுபடுகின்றீர்கள்…. அந்த பெண்ணை குறித்து நீங்களும் தெரிந்து கொள்ளாமல், உங்களை பற்றியும் அவளுடன் சொல்லாமல், அவளின் விருப்பத்தை கூட கேட்க்காமல் இல்லறத்தில் ஈடுபடும் ஆண்களும் உண்டு….

ஒரு பெண்ணை உடலாக மட்டும் பார்த்து ரசிப்பவன் அல்ல ஆண் மாறாக அவளின் உள்ளத்யையும் ஈமானையும் கண்டு நேசிப்பவனே சிறந்த ஆண்…

ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிப்பால் தெரியுமா 😭 அவளுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு, அவளுக்கு ஏற்படும் வயிற்று வலி, எவ்வளவு வலியை அனுவிப்பார்கள் தெரியுமா, ஆனால் சில ஆண்கள் இந்த நிலையிலும் அவளோடு உறவு கொள்வார்கள், பாவம் அந்த பெண் கணவனின் திருப்தியை நாடி அனைத்தையும் பொருத்துக் கொள்வாள் 😒

ஆனால் உண்மையான காதலையும் அன்பையும் புரிதலையும் ஈமானையும் பெற்ற ஆண், தன் மனைவியின் நிலையில் அக்கறை செலத்தி நல்ல முறையில் கவனித்துக் கொள்வான்….

மாதவிடாய் காலத்தில் தன் மனைவிக்கு தாயாக மாறுபவனே சிறந்த ஆண்…

திருப்தி சந்தோஷம் என்பது இரு மணம் ஒன்றுப்பட்டு இணைவதில் தான் இருக்கின்றது….

பெண்களே உங்களை காமத்தை தீர்க்கும் கருவியாக பார்க்கும் ஆண்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பும் உதவியும் தேடுங்கள்…

உங்களை கண்ணியப்படுத்தும் கணவனை அல்லாஹ்விடம் கேளுங்கள்

சிறந்த ஒழுக்கமுள்ள ஈமான் கொண்ட கணவன் வேண்டுமென்று நினைக்கும் பெண்கள், முதலில் தன்னை ஒழுக்கமுள்ள ஈமான் கொண்ட பெண்ணாக மாற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள் 🙂

காமம் என்பது காதலின் ஒரு பகுதி

காமம் என்பது வாழ்க்கையின் சிறு பகுதி

ஆனால் அதையே நோக்கமாக கொண்டு வாழாதீர்கள்……. !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *