நிதி அமைச்சர் வெளிநாட்டு பணியாளர்களிடம் வறி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக தான் முதலாவதாக எதிர்ப்பை வெளியிடுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் பாதுகாப்பின் ஊடாக வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களை பாதுகாப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று 15 இலட்ச இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும்,அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அங்கு பணிபுரியவில்லை என்றும்,இவர்கள் வாழ்வாதார போராட்டத்திற்காகவே அங்கு சென்று பணிபுரிவதாகவும் அமைச்சர் தலதா குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் நாட்டின் பொருளாதாரத்திற்காக பாடுபடுபவர்கள் என்றும்,இவர்களிடம் நிதி அமைச்சு எவ்விதத்திலும் வறி அறவிடுவதற்கு தான் இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.