• Sun. Oct 12th, 2025

நீர்கொழும்பு வைத்தியசாலை வைத்தியர்கள் பத்து பேருக்கு டெங்கு!

Byadmin

Jul 12, 2017 ,

நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையில் 982 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 591 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக,வைத்திய சாலையின் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, இவ் வைத்திய சாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதிமார்கள் உள்ளிட்ட ஊழியர்கள் 30 பேருக்கு டெங்குக் காய்ச்ச்சல் நோய் தொற்றியுள்ளதற்கான ஆதாரபூர்வ அறிக்கையொன்றினையும், தகவல் மையம் வெளியிட்டுள்ளது.

இங்கு கடமை புரியும் வைத்தியர்கள் 10 பேருக்கும், தாதிமார்கள் மற்றும் ஊழியர்கள் 20 பேருக்கும் டெங்குக் காய்ச்ச்சல் கடுமையாக ஏற்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்போது இவ் வைத்திய சாலையின் டெங்கு விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையின் வளவில் மெற்கொள்ளப்பட்ட டெங்கு தொடர்பிலான சோதனை நடவடிக்கைகளின்போது, பெரும்பாலான இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கைவிடப்பட்டுள்ள நிலையில் இருந்த மலசல கூடத்தின் (கொமட்) கழிவு அகற்றப்படும் இடம் மற்றும் மலசல கூடத்தின் அருகே இருந்து கண்டெடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் கப் ஆகியவற்றில் டெங்குக் குடம்பிகள் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதற்கு மேலதிகமாக, வைத்திய சாலையின் உணவகத்துக்கு அருகேயுள்ள கால் வாய் அசுத்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

– ஐ. ஏ. காதிர் கான்  –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *