இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் (21) பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 134 வாக்குகளும் டளஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும் அனுர குமார திஸாநாயக்காவுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன.
இலங்கையின் ஜனாதிபதியாக இன்று ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப் பட்டதை தொடர்ந்து பிரதமராக பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவும், தினேஷ் குணவர்தனவும் றோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கற்ற மாணவர்கள் என்பதும், தோழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.