• Mon. Oct 13th, 2025

ஜனாதிபதிக்கான போட்டி, நாளை காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு

Byadmin

Jul 19, 2022

இலங்கை ஜனாதிபதி பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று இடம்பெறது.

நாடாளுமன்றம் இன்று (19) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி, வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேட்டு மனுத் தாக்கல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு,

ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகபெருமவின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததுடன், அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

அத்துடன், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், அதனை மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.

இதன்படி, மூன்று பேர் ஜனாதிபதி வாக்கெடுப்புக்காக முன்வந்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரே, ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்புக்காக போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், நாளைய தினம் (20) ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபையில் அறிவிக்கப்பட்டது.

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட எதிர்பார்த்திருந்த சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *