ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கையொப்பமிடப்பட்ட இராஜினாமா கடிதத்தை, சிங்கப்பூரில் இருந்து சபாநாயகருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்துள்ளார்.
எனினும், கையொப்பமிட்ட குறித்த கடிதத்தை உறுதி செய்துகொள்வதற்காக அதன் மூலப் பிரதி தனக்கு நேரடியாகக் கிடைக்கும் வரை சபாநாயகர் காத்திருப்பதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து, குறித்த கடிதத்துடன், அதிகாரி ஒருவர், சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வரும் அடுத்த விமானத்தில் வருகைதரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.