• Sat. Oct 11th, 2025

“சூரியனில் பெரிய ஓட்டை” – நாசா

Byadmin

Jul 14, 2017

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம்  சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்டசூரிய கோட்டையை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இது பூமியை விட 19 மடங்கு பெரியதாகும்.

இந்த பகுதி சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும். இந்த பகுதி சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என தெரியவருகிறது .

இந்த பகுதி பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகளை வீசச்செய்கிறது. இந்த சீற்றங்கள் நமது சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய வெடிப்பு நிகழ்வுகளாகும்.

அவைகள் சூரியனின் பிரகாசமான பகுதிகளாக காணப்படுகின்றன. இவை  சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது.

இந்த சூரிய பகுதியில் இருந்து கடுமையான  கதிர்வீச்சின் காரணமாக  காந்த ஆற்றல் வெளிப்படுகிறது.

இந்த பகுதி  சுழன்று வருவதுடன் விரைவாக வளர்ந்து வருகிறது  என ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய விஞ்ஞான வெளிப்பாடாக  சூரியன் தனது வாழ்நாளின்  இறுதி கட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ஒரு பேரழிவு வெடிப்பு நிகழலலாம்.

சூரியன் வெளியிடும்  அதிக ஆற்றலில் புதிய தீவிர  ஊதா கதிர்கள் வெளியிடுவதை காட்டுகிறது. இது  மனிதர்களுக்கும் சுற்று சூழ்நிலைக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியதாகும். இந்த  சூப்பர்-ரேஸ் கதிர்கள்  தாவரங்களைக் கொல்வதன் மூலமும், பசுமைப் பகுதிகள் தரிசு நிலங்களாக மாற்றுவதன் மூலமும், உயிர்களை அழிப்பதற்கான சக்தியைக் கொண்டிருப்பதாக நாசா கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *