சவூதி அரேபியா தலைமையிலான நான்கு அரபு நாடுகளின் முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் கட்டார் நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளை ஜேர்மனில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
கட்டார் தொழிலதிபர் மூலம் இறக்குமதி செய்யப்படவிருக்கும் சுமார் 4000 கால்நடைகளின் முதல் கட்டமாக 165 ஹோல்ஸ்டீன் கறவை மாடுகள் ஜெர்மனியில் இருந்து கட்டாருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளின் தரை, வான் மற்றும் கடல் கட்டுப்பாடுகளால் அடிப்படை தேவைகளுக்கு இறக்குமதியில் தங்கி இருக்கும் கட்டார் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் கட்டார் ஏர்வெயிஸ் சரக்கு விமானத்தின் மூலம் புடபஸ் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மாடுகள் கட்டாருக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள பால் பண்ணைக்காகவே இவை கொண்டுவரப்பட்டுள்ளன.
அனைத்து கறவை மாடுகளும் நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்ட பின் கட்டாரின் 30 வீத பால் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று இந்த மாடுகளை இறக்குமதி செய்யும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அண்டை நாடுகளின் புறக்கணிப்புக்கு முன்னர் கட்டாரின் பால் தேவை சவூதி தரைவழி எல்லை ஊடாகவே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
– Reuters –