ஜோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் நடைபெற்ற தாக்குதலில், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு படைகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
தூதரகத்திற்கு அருகே உள்ள பகுதிகள் மூடப்பட்டுள்ளதுடன், தூதரத்தில் உள்ள அதிகாரிகளை இஸ்ரேலிய அதிகாரிகள் வெளியேற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்மானில் உள்ள ஒரு குடியிருப்பு மாவட்டமான ரபியா அண்டைப்புற பகுதியில் கடுமையாக பாதுகாக்கப்பட்ட தூதரகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் –