• Sat. Oct 11th, 2025

கட்டாரில் உணவு தட்டுப்பாடு! ஆபத்தான கட்டத்தில் 27லட்சம் மக்கள்

Byadmin

Jul 24, 2017

வளைகுடா நெருக்கடியில் சிக்கியுள்ள கட்டாரில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கட்டாரை பிராந்திய நாடுகள் புறக்கணித்துள்ள நிலையில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பிராந்திய நாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் இன்றி அந்நாட்டு மக்கள் அவலப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டாரில் சுமார் 27 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான உணவு பிரச்சினை தீர்ப்பதில் கட்டார் அரசாங்கம் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

தொழில் வாய்ப்பு தேடி அங்கு சென்றுள்ள சுமார் 140,000 இலங்கையர்கள் கட்டாரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சவுதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகளினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள கட்டார் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டுக்கான பேச்சுவார்த்தைக்கு கட்டார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இணக்கம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி சவுதி அரேபியா உட்பட நான்கு நாடுகள் கட்டார் நாட்டினை புறக்கணித்தது.

இதன் காரணமாக குறித்த நான்கு நாடுகளிடமிருந்து பொருட்கள் இறக்குமதி, விமான பயணம் உள்ளிட்ட பலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *