• Mon. Oct 13th, 2025

சர்வதேச பிடியாணை மூலம், கோட்டாபயவை கைது செய்ய வேண்டும்! – பிரித்தானிய எம்.பி வலியுறுத்து

Byadmin

Jul 14, 2022

ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே இலங்கை மக்களுக்கு தற்போதைய பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சர்வதேச பிடியாணை மூலம் கோட்டாபயவை கைது செய்ய வேண்டும்! – பிரித்தானிய எம்.பி கோரிக்கை | Gotabaya Rajapaksa Should Be Arrested

ராஜபக்ச அரசாங்கத்தின் ஜனரஞ்சகமான வரி குறைப்பு, விண்ணை முட்டும் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் ஊழல் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சர்வதேச நாயண நிதியத்துடன், இணைந்து செயற்படவும், பொருளாதா ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் உட்பட இலங்கைத் தீவில் உள்ள அனைவரின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *