ஏராளமான பொதுமக்கள் சுற்றிவளைத்ததை அடுத்து இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி தனது ஒளிபரப்பு சேவையை இடை நிறுத்தியது.
நாடு முழுவதும் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரிவிட்டுள்ளதுடன்,
வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்யுமாறும், காவல்துறையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி, பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினியை சுற்றிவளைத்து உள் நுழைந்தனர்.
இதனை அடுத்து இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி தனது ஒளிபரப்பு சேவையை இடை நிறுத்தியது.
அங்கு ஏராளமான இராணுவத்தினர் தற்போது குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.