• Mon. Oct 13th, 2025

எரிபொருள் பௌசர் வழுக்கி விழுந்தது, எரிபொருளை சேகரிக்கும் பிரதேச வாசிகள்

Byadmin

Jul 11, 2022

திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று -11- காலை குறித்த பௌசர் 33000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற போதே, ஹப்புத்தளை- பங்கெட்டிய பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதி வழுக்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்துக்குள்ளான பௌசரிலிருந்து பிரதேசவாசிகள் எரிபொருளை சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *