சுகாதார அமைச்சில் கணினி தொழில்நுட்பக் கொள்வனவின் போது 421மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்னவென்று தற்போது வரையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பதிலளிப்பதற்கு மறுத்து வருகின்றனர். இந்த நிலைமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படுகின்றன அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கு அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் சகலரும் பொறுப்புக் கூறுவதற்கு கடமைப்பட்டவர்களாவர். இதனை ஏற்றுக் கொள்ளும் ‘கோப்’ எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித்த ஹேரத் வெளிப்படைத்தன்மையுடன் அரசாங்கத்தின் நிதிக் கையாளுகை அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.