• Sat. Oct 11th, 2025

முஸ்லிம்ள் மிக சவாலான நேரத்திலயே ஹஜ் பண்டிகையை கொண்டாடுகின்றனர், இருள் நீங்க பிரார்த்திப்போம்

Byadmin

Jul 11, 2022

அந்நியோந்நியமான முறையில் மனிதர்களுக்கு இடையில் இருக்க வேண்டிய கருணை, பாசம், அன்பு போன்ற பிணைப்புகளின் மகிமைக்கு பரந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஹஜ் பண்டிகையை கொண்டாடும் இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி,சமாதானம் மற்றும் ஆறுதல் கிட்ட பிரார்த்திக்கின்றேன்.

ஹஜ் என்பது முஸ்லிம்களால் ஆண்டுதோறும் மக்காவிற்கு மேற்கொள்ளப்படும் யாத்திரையாகும். இது இஸ்லாமிய போதனைகளின் பிரகாரம் ஐந்தாவது தூணாகக் கருதப்படுவதோடு,வசதி படைத்த மற்றும் வலிமையான ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் கடமையை செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மனித நேயத்திற்கும் தெய்வீகத்திற்கும் இடையிலான மகத்தான பிணைப்பை பிரதிபலிக்கும் ஒரு பண்டிகையாக ஹஜ் பண்டிகையை கருதலாம்.

இவ் ஆண்டு, அனைத்து இலங்கை முஸ்லிம்களும் மிகவும் சவாலான நேரத்திலயே ஹஜ் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

துரதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியின்மை ஆகிய இருள்கள் நீங்கி,அதிர்ஷ்டமும் சௌபாக்கியமும் உதயமாக வேண்டும் என இந்த ஹஜ் தின நன்நாளில் பிரார்த்தனை செய்ய திடசங்கற்பம் பூணுவோம்.

குறிப்பாக, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய பக்தர்கள் ஒன்று கூடி உலக அமைதிக்காக சமய வழிபாடுகளை மேற்கொள்ளும் ஒரு சர்வதேச மாநாடாக ஹஜ் பண்டிகையை கருதலாம்.

நீண்ட காலமாக, இஸ்லாமியர்கள் புனித நகரமான மக்காவின் புனித கஃபத்துல்லா ஆலயத்தை நோக்கிய திசையில் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுகின்றனர்.

உலக அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான உங்களது உயர்ந்த அர்ப்பணிப்பைக் கருத்திற் கொண்டு, சிறந்ததொரு எதிர்காலத்திற்காக உங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சி தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *