பங்களாதேஷின் எரிபொருள் விலைகள் 1971 இல் அந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் அரசாங்கம் வெள்ளிக்கிழமை இரவு எரிபொருள் விலையை 51.7 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது, இது இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப் படுகிறது.
மின்சாரம், எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சகத்தின் விலை அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது 135 taka (இலங்கை ரூபா படி 513 ரூபா ) ஆகும், இது முந்தைய விலையான 89 taka வை விட 51.7 சதவீதம் அதிகம்.
டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை 42.5 சதவீதம் அதிகரித்து லிட்டருக்கு 114 taka வாக உள்ளது.