இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும், காஸாவில் நிலையான போர்நிறுத்தத்துக்கும் ரஷ்யா இன்று அழைப்பு விடுத்துள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்கள் மீதான அப்பட்டமான மற்றும் மனிதாபிமானமற்ற வான்வழித் தாக்குதல்களின் விளைவாக, இதுவரை குறைந்தது 24 பாலஸ்தீனியர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.