• Sun. Oct 12th, 2025

இலங்கையில் அறிமுகம் 5 MILLION MONEY DROP நிகழ்ச்சி

Byadmin

Aug 12, 2022

சர்வதேச MONEY DROP நிகழ்ச்சி இலங்கை நேயர்களுக்காக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் MONEY DROP நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

சிரச ஊடக வலையமைப்பின் உயரதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

சம்பத் வங்கி, யுனிலிவர் நிறுவனம் மற்றும் பாரதி எயார்டெல் லங்கா நிறுவனங்களின் இணை அனுசரணையில் இந்த நிகழ்ச்சி ஔிரப்பாகவுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் Fox Tv-இல் ஒளிபரப்பப்பட்ட THE 5 MILLION MONEY DROP நிகழ்ச்சி சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

5 MILLION MONEY DROP எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை முதல், வார இறுதி நாட்களில் இரவு 07.30 மணிக்கு சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பாகவுள்ளது.

சர்வதேச நிகழ்ச்சியொன்றின் அனுபவத்தை பெறுவதோடு, 05 மில்லின் ரூபாவை வெற்றிகொள்வதற்கான சந்தர்ப்பமும் பார்வையாளர்களுக்கு கிடைக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *