why, where, what, when, how… ஏன், எங்கே, எப்படி, எப்போது, எதனால் இவைகள் நாம் நம் வாழ்க்கையிடம் கேட்கவேண்டிய முக்கியமான கேள்விகள். இந்த கேள்விகளுக்கு மட்டும் நமக்கு பதில் தெரிந்தால் பின்னர் எந்த காரியம் எடுத்தாலும் நமக்கு வெற்றி தான்.
யாராக இருந்தாலும் ஓரு காரியத்தை தொடங்கும் போது அதில் நமக்கு வெற்றி உண்டாகவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தே அதை தொடங்குவார்கள். இருப்பினும் தொடக்கத்தில் இருந்த எண்ணம் போக போக மாறிப்போகும். பின்னர் தோல்விக்கான எண்ணம் நம் மனதில் மேல் எழும். இதனையடுத்து எடுத்த காரியத்தல் நாம் தோல்விவை தழுவுவோம்.
எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் ஒரு காரியத்தை தொடங்குபவர்கள் ஒரு கட்டத்தில் முடங்கி போகிறார்கள். இதற்கு மாற்றாக அந்த காரியத்தை நாம் ஏன் செய்கிறோம்.. எதற்காக செய்கிறோம்.. எப்படி செய்யப்போகிறோம் என்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து காரியத்தை செய்பவர்கள், அதை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள்.
துன்பம், கவலை, சோகம், குழப்பம், என எதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை பாதிப்பது கிடையாது. இதைதான் மனநல மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைக்கிறார்கள்