அதாவது தன்னை தானே விரும்புதல், மற்றவர்களைப் பற்றிகவலையின்மை, அடிப்படைக்கு மாற்றம், எதிலும் தான்என்ற மனோபாங்கு, தன்னை தானே உயர்வுப்படுத்துதல்என பல கருப்பொருற்களை உள்வாங்குகின்றன.
பொதுவாக அந்த மனோபாங்கு மனித ரீதியான போக்கிலேஉருவாகின்றது. தன்னை சமூகத்தை விட்டும் நீக்கி ஒருதனிமையான கோட்பாட்டில் கொண்டு செல்கின்றது.மற்றவர்களை மதிக்காமல் தன்னை தானேநேசித்துக்கொண்டும், தற்பெருமையுடனும் வாழும்மோசமான ஒரு போக்கே இந்த சுயநலம்.
அது உளரீதியாக (பொறாமை, வஞ்சகங்களை) உண்டாகும்ஷைதானிய பன்பாகவும், பணம், பதவிகளை விரும்பும் தீயநிலையை நம்மில் உண்டாக்கவும் காரனமாக அமையும்.
அதே போன்று நம்மிலுள்ள நற்குணங்களையும்(மற்றவர்களை நேசித்தல், உதவுதல்) அளித்துவிடும்.
சுயநலம் ஏற்படுவதற்கான காரணிகள்:
1-பிழையான வளர்ப்பு.
2-அதிகம் கட்டுப்பாடுத்தல்.
3-அதிகம் தண்டனைகள் கொடுத்தல்.
4-பொறாமை, மானத்தை உடைத்தல். (பொது தளங்களில்)
5-இழிவு படுத்துதல். (மற்றவர் முன்னிலையில்)
6-சம உரிமை வழங்காமலிருத்தல். (பிள்ளைக்ளுக்கிடையில்)
7-பெற்றோர்களின் இளப்புக்கள்.
8-வறுமை.
சுயநலத்தை குனப்படுத்தும் முறைகள்:
இதில் சமூகத்துக்கும், குடும்பதுக்கும் பாரியபொறுப்புள்ளது. ஏனெனில் ஒரு குழந்தை அடிப்படையில்அவனை சூழ இருக்கின்றவைகளாலேயே அதிகம்பாதிக்கப்படுகின்றான். அவனை சிறுவயதிலிருந்தேசுயநலமில்லாமல் வளர்க்கவும், கற்றுக்கொடுக்கவும்கடமைப்பட்டுள்ளோம். அவன் தான் விரும்புவதைஅடுத்தவனுக்கும் விரும்பும் மனோ நிலை அவனுள்உண்டாக்குவதும் மிக அவசியமே.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் (ரழி) அவர்கள்அறிவிக்கிறார்கள்:
“உங்களில் ஒருவர் தான் விரும்புவதை தனதுசகோதரனுக்கும் விரும்பாத வரை, முஃமின் ஆக மாட்டார்” (புகாரி, முஸ்லிம்)
நாங்கள் எங்களை இந்த தீய குணத்திலிருந்து சுத்தப்படுத்தவேண்டும். அதே போன்று சுய ஆசைகளை (தனக்கு மட்டும்கிடைக்கும்) விட்டும் தூரமாக வேண்டும்.
அதே வேளை எங்களை உதவி பரிமாறல், கூட்டு வேளைகள்,கலந்து செயல்படல், நெருக்கமான உறவுகள் என பலகேணங்களை நம் வாழ்வில் அங்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.
-தாரிக் நிஸார் (அஸ்ஹரி) BA –