• Sun. Oct 12th, 2025

தந்தை பறித்த தேங்காய், மகனின் உயிரை எடுத்துச் சென்றது

Byadmin

Sep 1, 2022

நமுனுகுல பகுதியில் தென்னை மரமொன்றில் ஏறி தந்தை ஒருவர் பறித்த தேங்காய், அவரது மகனது தலையில் விழுந்தமையால் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் நமுனுகல – மியனகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 10 ஆம் தரத்தில் கல்வி கற்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதாவது 29 ஆம் திகதி மாலை 6.30 மணி அளவில் 50 அடி உயரமான தென்னை மரத்தில் ஏறி தந்தை தேங்காய்களைப் பறித்துக்கொண்டிருந்த போது, வீட்டில் இருந்து வெளியே வந்த மகனின் தலை மீது தேங்காய் விழுந்துள்ளது.
இதனை அடுத்து பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (31) அதிகாலை மகன் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இந்த மரணத்துக்கு காரணமான 55 வயது தந்தைக்கு எதிராக, கவனயீனமாக தேங்காய் பறித்த குற்றச்சாட்டின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *