துபாயில் இலங்கையிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2022 ஆசியக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியதால் பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தார்.
கடைசி இரண்டு ஓவர்களில் 25 ரன்களை கொடுத்த பங்களாதேஷ் அணி 183 ஓட்டங்களை காக்க தவறி, இலங்கையிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
தசுன் ஷனக (33 பந்துகளில் 45), சமிக கருணாரத்னே (10 பந்துகளில் 16), மற்றும் அசித பெர்னாண்டோ (3 பந்தில் 10*) ஆகியோரின் முக்கிய பங்களிப்பால் இலங்கை இரண்டு விக்கெட்டுகள் மற்றும் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது .
தோல்வி தொடர்பில் கருத்து தெரிவித்த ஷாகிப்,
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பங்களாதேஷ் அணி மிகவும் கடினமாக பயிற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு நிகழ்வில் பேசிய அவர் கூறியதாவது:
“எங்கள் கடந்த ஆறு மாதங்களை நீங்கள் பார்த்தால், நாங்கள் போட்டித்தன்மையுடன் இருக்கவில்லை, உலகக் கோப்பை ஒரு வித்தியாசமான சவாலாக இருக்கும், நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் நாங்கள் பல முறைகளில் பணியாற்ற வேண்டும்.”
டெத் ஓவர்களில் வங்கதேசத்தின் பந்துவீச்சு குறித்த கவலைகளையும் ஷகிப் எடுத்துரைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“டெத் பந்துவீச்சை நாங்கள் மேம்படுத்த விரும்புகிறோம், அந்த பகுதியை நாங்கள் தவறவிட்டோம்
கடைசி இரண்டு ஓவர்களில், அவர்கள் எட்டு விக்கெட்களை இழந்து இருந்தனர், மேலும் 18 ரன்கள் தேவைப்பட்டது,
மேலும் ஐந்து பந்துகள் மீதமிருக்க அவர்கள் அதை எடுத்தனர், இது டெத் ஓவர்களில்
நாங்கள் மோசமாக இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
நடுத்தர ஓவர்களில் நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்பதையும் காட்டுகிறது.
அதேவேளை தங்கள் அணியை சூப்பர் 4 கட்டத்திற்கு அழைத்துச்
இலங்கை துடுப்பாட்ட வீரர்களை ஷகிப் பாராட்டினார்.
குசல் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மற்றும் ஷனகா நன்றாக அவருக்கு ஆதரவு கொடுத்தார் .
நாங்கள் விக்கெட்டுகளை எடுக்க விரும்பினோம், வேகப்பந்து வீச்சாளர்கள் அதை ஓரளவு செய்தார்கள் , 180 ரன்களுக்குள் நாங்கள் மடக்கி இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.