• Sat. Oct 18th, 2025

சீனாவில் இருந்து தெஹிவளைக்கு வந்த, 3 வங்காளப் புலிக்குட்டிகளின் தாய் ‘கெல்ல’ புற்று நோயினால் உயிரிழப்பு

Byadmin

Sep 7, 2022

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பரபரப்பாக பேசப்பட்ட மூன்று வங்காளப் புலிக்குட்டிகளின் தாயான “கெல்ல” உயிரிழந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி அகிரா, டுமா மற்றும் லியோ என்ற குட்டிகளைப் பெற்றெடுத்த “கெல்ல” கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடைத் துறை ஊழியர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அது உயிரிழந்துள்ளது .

“கெல்ல” தனது குழந்தைகளுக்கு மிகவும் அன்பான தாயாக இருந்தது. இறக்கும் போது அதற்கு சுமார் 15 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது

2008 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள சின்ஜியாங் சஃபாரி பூங்காவில் இருந்து விலங்கு பரிமாற்ற நிகழ்ச்சி மூலம் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டது

அதன் உடல் பிரேத பரிசோதனை மற்றும் பிற சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *