• Mon. Oct 13th, 2025

பிரித்தானிய மன்னராக சார்ள்ஸ் பிரகடனம்

Byadmin

Sep 11, 2022

இளவரசர் சார்ள்ஸ் பிலிப் ஆர்தர் ஜோர்ஜ் (Charles Philip Arthur George)பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் (King Charles III) மன்னராக இன்றைய -10-  தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். 

இதற்கான நிகழ்வு புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைப்பெற்றது. 

மன்னராக பிரகடனப்படுத்துவதற்கான ஆவணத்தில்  வேல்ஸ் இளவரசர் வில்லியம் கைச்சாத்திட்டத்தை அடுத்து, பிரதமர் லிஸ் ட்ரஸ், பேராயர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தும் நிகழ்வில் ராணி கமிலா, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்களான போரிஸ் ஜான்சன், Tony Blair, டேவிட் கெமரூன், தெரேசா மே உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

மன்னராக பிரகடனப்படுத்தப்பட்ட பின் புனித ஜேம்ஸ் மாளிகையில் அரச இசைக்குழுவினர் மன்னருக்கு புகழஞ்சலி வாசித்தனர். 

அப்போது, ​​அரண்மனை அருகே கூடியிருந்த மக்கள், “God save the King!” என வாழ்த்தினர்.

சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவின் நிறைவாக Hyde Park பூங்காவில் 41 பீரங்கி வேட்டுக்களும் லண்டன் கோபுரத்தில் 62 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மன்னருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரால், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் நடைபெறும் நாள் பிரிட்டனுக்கு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் லண்டன் ரோயல் எக்ஸ்சேன்ஞ் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மன்னர் பிரகடனத்தை வாசித்தார். 

பரம்பரை மூலம் தனக்கு மாற்றப்பட்ட இறையாண்மையின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தனக்கு ஆழ்ந்த புரிதல் இருப்பதாக சார்ள்ஸ் மன்னர் அறிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள பொதுநலவாய நாடுகளின் மக்களுக்கு அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

புனித ஜேம்ஸ் அரண்மணையில் முடிசூட்டு விழாவை நிறைவு செய்த மன்னர், பக்கிங்ஹாம் மாளிகைக்கு திரும்பினார். 

நாளை நண்பகல் இந்த பிரகடனங்கள் ஸ்​கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸில் வாசிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை ஔிப்பதிவு செய்ய இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்ற போதிலும் இன்றைய நிகழ்வை ஔிப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *