நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2022 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இலங்கை அணி 2022 ஆசியகிண்ண சாம்பியன் ஆனது அறிந்ததே..
போட்டிக்கு பிந்தைய நேர்காணலில் , பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம், முதல் 8 ஓவர்களில் இலங்கை அணியில் தாம் ஆதிக்கம் செலுத்தியதாகவும்,
ஆனால் பானுக ராஜபக்ச, வனிந்து ஹசரங்கா மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோருக்கு இடையேயான பார்ட்னர்ஷிப் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
“சிறப்பான கிரிக்கெட்டை விளையாடிய இலங்கைக்கு வாழ்த்துகள். முதல் எட்டு ஓவர்களுக்கு நாங்கள் அவர்களை ஆதிக்கம் செலுத்தினோம், ஆனால் பானுக ராஜபக்சே உடனான பார்ட்னர்ஷிப் ஆச்சரியமாக இருந்தது.
துபாயில் கிரிக்கட் விளையாடுவது எப்போதும் நன்றாக இருக்கும்.
பாபர் அசாம் மேலும் கூறுகையில்,
அதே வேளை எமது அணியினர் தங்கள் திறமைக்கு ஏற்ப பேட்டிங் செய்யவில்லை, மேலும் பந்துவீச்சில் 15 -20 கூடுதல் ரன்கள் கொடுத்தனர்.
மேலும், பாகிஸ்தானின் பீல்டிங் மோசமாக இருந்ததையும் பாபர் அசாம் ஒப்புக்கொண்டார்.
“எங்கள் திறமைக்கு ஏற்ப நாங்கள் பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், ஆனால் நாங்கள் 15-20 கூடுதல் ரன்களை விட்டுக் கொடுத்தோம், நன்றாக முடிக்க முடியவில்லை. நிறைய பாசிட்டிவ்களை நாம் எடுக்க வேண்டும். எங்களின் பீல்டிங் அந்தளவுக்கு இல்லை, பேட்டிங்கால் அதை சரியாக முடிக்க முடியவில்லை.
ஆனால் ரிஸ்வான், நசீம் மற்றும் நவாஸ் ஆகியோர் பாசிட்டிவ்வான வீரர்கள் .
விளையாட்டில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும்,
ஆனால் நாம் குறைவான தவறுகளை செய்தால் நன்றாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.