• Thu. Oct 23rd, 2025

7 மகள்களை பெற்ற தந்தையை பராமரிக்க 2 லட்சம் ரூபாய் பணம் கேட்கும் பிள்ளைகள் – இலங்கையில் அவலம்

Byadmin

Sep 19, 2022

கொழும்பு பாதுக்க பிரதேசத்தில் 82 வயதுடைய தந்தை ஒருவரை பராமரிக்க பிள்ளைகள் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாக வயோதிபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தின் உதவியை நாடியுள்ளார்.

தனது 7 மகள்களில் யாரும் தன்னை கவனித்துக் கொள்ளவில்லை என அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த தந்தையின் 7 மகள்களையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் பாதுக்க பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில சேனநாயக்க மேற்கொண்ட விசாரணையின் போது, அவரரின் பிள்ளைகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

7 மகள்களும் தங்கள் தந்தையின் வாழ்க்கையின் கடைசி காலம் என்பதால் மாறி மாறி தந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர், ஆனால் மகள்கள் தங்கள் தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் 2 லட்சம் பணம் தருமாறு கூறியுள்ளனர்.

தந்தையிடம் கேட்டபோது, ​​தன்னிடம் பணம் இல்லை எனவும் மாத்தறையில் உள்ள காணியை விற்று கிடைத்த பணத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மீதமுள்ள 4 லட்சம் பணம் இளைய மகளுக்கு கொடுக்கப்பட்டதாகவும், அதனை பெற்றுக் கொண்ட இளைய மகளின் பராமரிப்பில் இருந்ததாகவும் மருமகன் அவரையும் மனைவியையும் பாதுக்க மாவத்தகமவில் உள்ள வாடகை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் யோசனையை விரும்பாத மகள்கள் தொடர்பான முறைப்பாட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக பாதுக்க பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில சேனநாயக்க தெரிவித்தார்.

பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் மகள்களில் ஒருவர் 82 வயதான தந்தையை தற்காலிகமாக கவனித்துக் கொள்ள இணங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *