இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று பிற்பகல் அமைச்சரின் தலைமையில் சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய அமைச்சர், டெங்கு நோயாளர்களுக்கு பப்பாளி இலைச் சாறு பொருத்தமானது என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாக கூறியுள்ளார்.
அது கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையில் என்ற போதிலும், இந்தியாவில் பப்பாளி இலைச் சாறுடன் இணைந்ததான மருந்து தயாரிக்கப்படுவதாகவும், அவுஸ்திரேலியாவிலும் மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும் இது விஞ்ஞான ரீதியாக கண்டறியப்படவில்லை என்றும், டெங்கு நோய் தடுப்பிற்கான விஷேட நிபுணர்கள் பப்பாளி இலைச் சாற்றை மருந்தாக ஏற்றுக் கொள்ளாமையினால் அது தொடர்பான முறையான பரிசோதனை ஒன்று செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜித கூறியுள்ளார்.