• Sun. Oct 12th, 2025

உலகில் பார்வையிட சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் 17ஆவது இடத்தில் இலங்கை

Byadmin

Oct 8, 2022

Condé Nast Traveller இன் Readers’ Choice விருதுகள் 2022 இன் முதல் 20 பட்டியலில் இலங்கையும் இடம்பித்துள்ளது.

உலகில் பார்வையிட சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை 17ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை 88.01 புள்ளிகளைப் பெற்று ஸ்வீடன் (16), இஸ்ரேல் (18) ஆகியவற்றுக்கு இடையில் தரவரிசையில் உள்ளது.

கடந்தாண்டு Condé Nast Traveller மூலம் இலங்கை ஐந்தாவது மிகவும் பிடித்த நாடாக தரப்படுத்தப்பட்டது.

இருப்பினும், துருக்கி, அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு மேலே தரவரிசையில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

Readers’ Choice விருதுகளின் 2022 பதிப்பின் படி, 91.22 மதிப்பெண்களுடன் போர்த்துக்கல் , ஜப்பான் – 91.17, மற்றும் தாய்லாந்து – 90.46 ஆகிய இடங்களைப் பிடித்த முதல் மூன்று நாடுகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *