• Sat. Oct 11th, 2025

இந்த உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடாதீங்க! மரணம் கூட நிகழலாம்! ஆபத்து..

Byadmin

Jul 23, 2017

உலகம் பயணிக்கும் வேகத்தில் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் பல உணவுகளில் இருக்கும் தீமைகளை பற்றி அறிந்து கொள்வதில்லை.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் கெட்டு போன வகைகளில் நச்சு இருக்கும். இதன் தோலிலோ அல்லது உள்பக்கத்திலோ பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிடக்கூடாது.

சூரிய ஒளிபடும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் பச்சைநிறத் திட்டுகள் உண்டாகின்றன.

கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இது தீங்கான ஒன்றே. இதை சாப்பிடும் பட்சத்தில் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.

நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயரியா போன்றவை ஏற்படும்.

முதலில் பலவீனமாக இருக்கும். கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு. கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *