• Sun. Oct 12th, 2025

ஆசியாவின் சம்பியன், நபீபியாவிடம் வீழ்ந்தது – வரலாற்று வெற்றி என்கிறது ICC

Byadmin

Oct 16, 2022

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 55 ஓட்டங்களால் நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக அதிகபட்சமாக 29 ஒட்டங்களையும், பானுக்க ராஜபக்ஷ 20 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஜான் ஃப்ரைலின்க், டேவிட் வைஸ், பென் ஷிகோங்கோ மற்றும் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *