• Sun. Oct 12th, 2025

உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் சன்ன ஜெயசுமண

Byadmin

Oct 18, 2022

பாராளுமன்ற உறுப்பினர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியருமான சன்ன ஜயசுமண, உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய தரவரிசையின்படி, உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் 38 இலங்கை விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில் பேராசிரியர் சன்ன ஜயசுமனவும் உள்ளடங்குகிறார்.

இவ்வாறு மதிப்பிடப்பட்ட இலங்கை விஞ்ஞானிகளில் பேராசிரியர் மெத்திக விதானகே, சேனக ராஜபக்ச, ரணில் ஜயவர்தன, நிமல் சேனநாயக்க, சரோஜ் ஜயசிங்க, எஸ்.ஏ.எம்.குலரத்ன, ஜானக டி சில்வா, பேராசிரியர் நீலிகா மாளவிகே மற்றும் கமனி மென்டிஸ் ஆகியோர் அடங்குவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *