அவுஸ்திரேலியாவில் நிலவும் குளிர் காலநிலையே இலங்கை வீரர்கள் உபாதைக்கு உள்ளாகுவதற்கான பிரதான காரணம் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வைத்திய குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டீ சில்வா தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவையுடன் இடம்பெற்ற சம்பாசனையின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உபாதைக்கு உள்ளாவதற்கு பல காரணங்கள் உள்ளன.
குளிரான காலநிலையே அதில் பிரதான காரணியாக அமைகிறது.
இலங்கை அணி வீரர்கள் எந்தவித உபாதையுமின்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற ஆசிய கிண்ணத்தை கைப்பற்றினர்.
அங்கு நிலவும் காலநிலையில், இலங்கை அணிக்கு சிறந்த அனுபவம் உள்ளமையால் வீரர்களுக்கு உபாதை ஏற்படவில்லை.
எனினும், அவுஸ்திரேலியாவில் எதிர்பார்த்ததை விடவும் அதிக குளிரான காலநிலை நிலவுகின்றது.
அத்துடன், மைதானத்தில் புற்தரை அதிக மென்மையாக உள்ளதன் காரணமாகவும் காயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இலங்கை வீரர்கள் முழுமையான திறமையை வெளிப்படுத்தி விளையாடுகின்றனர்.
இதன் காரணமாகவும், காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில்இ குளிரான காலநிலையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வைத்திய குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்