இந்தியா கேரளாவில் இஸ்லாதை ஏற்றுக் கொண்டதற்காக படுகொலை செய்யப்பட்ட ஃபைசல் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார் (ஃபைசல்) என்பவர் இஸ்லாத்திற்கு மாறியதற்காக கடந்த வருடம் நவம்பர் 19 அன்று அதிகாலை தனது மனைவியின் பெற்றோரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக ஆட்டோவில் சென்ற ஃபைஸலை மர்ம நபர்கள் வெட்டி படுகொலைச் செய்தனர்.
இந்த கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இருப்பது தெரிய வந்ததை அடுத்து இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது
இந்நிலையில் ஃபைசல் குடும்பத்தை சேர்த 8 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். ஃபைசலில் இரண்டு சகோதரிகள் மற்றும் அவரது மச்சான் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 8 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
ஃபைசலின் மனைவி மற்றும் அவரது குழந்தை ஃபைசல் கொல்லப்படும் முன்பே இஸ்லாத்திற்கு மாறிய நிலையில் ஃபைசலின் தாய் ஃபைசல் கொல்லப்பட்ட ஒரு மாதத்தில் இஸ்லாத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஃபைசல் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கேரள அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் –