ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் தேசிய புலனாய்வு முகமையின் பரிந்துரையின் பேரில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கும் இவர் வேறு நாடுகளுக்குத் செல்ல இயலாத வகையில் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மும்பையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், அவரது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது.
ஜாகிர் நாயக்கின் பாஸ்போர்ட்டு ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.