• Mon. Oct 13th, 2025

நம்மநாட்டு கதலி ஏற்றுமதிப் பொருளாகிறது

Byadmin

Nov 12, 2022

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது.

இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் புளி வாழை (கதலி) இன்று சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய பழமாக மாறியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய புளி வாழைப்பழங்களின் முதல் தொகுதி எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

12,500 கிலோ புளி வாழைப்பழத்தை டுபாய் சந்தைக்கு விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை பகுதியில் பயிரிடப்பட்ட வாழைத்தோட்டத்தில் பெறப்பட்ட அறுவடை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் வகையில் அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் ராஜாங்கனை புளி வாழைத் திட்டம் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கவனிப்பாரற்ற கிடந்த வாழைப்பழங்கள் இன்று நாட்டுக்கு டொலரை ஈட்டிக் கொடுக்கும் பழமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலக வங்கி உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையின் விவசாயத்துறையை புதுப்பிப்பதற்காக விவசாயப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

இந்த பிரிவு இராஜாங்கனை பிரதேசத்தில் புளிவாழை செய்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக திட்டத்தின் பணிப்பாளர் ரொஹான் விஜேகோன் தெரிவித்திருந்தார். 

இதன் மூலம் வருடாந்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோகிராமுக்கும் மேற்பட்ட தரமான வாழையை உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்க முடிவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் புளிவாழை செய்கையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *