பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிந்துள்ளார்.
சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலையில் அவரது கண் உட்பட உடற்பாகங்களை பேராதனை வைத்தியசாலைக்கு தானமாக வழங்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி சச்சினியும் அவரது இரண்டு நண்பிகளும் ஹில்டா ஒபேசேகர விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி – பெற்றோர் எடுத்த நடவடிக்கை | A University Student Died In An Accident
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சச்சினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழக்கும் போது அவருக்கு 23 வயது.
குறித்த யுவதி தங்காலை பெண்கள் கல்லூரியின் பழைய மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை தங்காலை பொது மயானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.