அறிஞர் ஒருவரிடத்தில் தனது பிள்ளைகளின் தாங்க முடியாத சேட்டைகள்,தொல்லைகள் பற்றி ஒருவர் முறையிட்டார்.
அந்த அறிஞர் மிகவும் நிதானமாக: உனது பிள்ளைகளின் குறும்பும் அவர்களது தொல்லைகளும் இல்லாமல் உனது வீடு எப்போது அமைதியாக இருக்குமென்று தெரியுமா எனக் கேட்டார்.
அதற்கந்த மனிதர்: எப்போது? என்றார் ஆர்வமாக.
அந்த அறிஞரும் மிக உறுதியாக : உனது பிள்ளைகள் மிகக் கடுமையாக நோயுற்று படுக்கையில் இருக்கும்போதுதான் உனது வீடும் அமைதியாக இருக்கும்.
உனது பிள்ளைகளின் சத்தத்தையும் விளையாட்டையும் எப்போதெல்லாம் தொந்தரவாகவும் தொல்லையாகவும் நீ நினைக்கின்றாயோ அப்போதெல்லாம் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொள்.
ஆரோக்கியம் இல்லையென்றால் உனது பிள்ளைகளால் இவ்வாறு ஓடி விளையாடி மகிழ முடியாது என பதிலளித்தார்.
உனது பிள்ளைகளின் சேட்டைகளும் அவர்களது விளையாட்டும் உனது வாழ்வில் நீ காணும் அழகான அம்சங்கள்…
அதுதான் நீ அனுபவிக்கும் மிகச் சிறந்த தருணங்களும் கூட…