• Mon. Oct 13th, 2025

மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட, முகமது யூசுப் நடந்தது என்ன..? (முழு விபரம்)

Byadmin

Nov 26, 2022

கொழும்பில் குழந்தை ஒன்றை வீட்டு மாடியில் இருந்து தூக்கி எறிந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குழந்தை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிராண்ட்பாஸ், சமகிபுர, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தனது தாயின் மூத்த சகோதரனால் கீழே வீசப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாயின் மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகமது யூசுப் என்ற குழந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேகநபரின் மாமா மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் அங்கொட மனநல வைத்தியசாலையில் சிறிது காலமாக சிகிச்சை பெற்று வந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய் மற்ற இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்த போது, அறைக்குள் வந்த சகோதரன் தீடீரென குழந்தை மாடி ஜன்னல் வழியாக கீழே வீசயுள்ளார்.

குழந்தை கீழே விழுந்ததையடுத்து, அந்த இடத்தில் கூடிய மக்கள் குழந்தையை வாகனத்தில் ஏற்றி பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தனர்.

“இதை செய், அதை செய் என்று ஒருவர் என் காதில் சொல்கிறார். அவர் சொல்வதையே நான் செய்வேன்” என சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தாரகாவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *