• Mon. Oct 13th, 2025

டிசம்பர் 1 முதல் விசா கட்டணங்களில் திருத்தம் (முழு விபரம் இணைப்பு)

Byadmin

Nov 26, 2022

டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், விசா கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைய, இரட்டை பிரஜாவுரிமைக்கான புதிய கட்டணம் 2000 அமெரிக்க டொலர்களாகும்.

இரட்டை பிரஜாவுரிமையுடைய விண்ணப்பதாரரின் 22 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான கட்டணம் 500 அமெரிக்க டொலர்களாகும்.

பிராஜாவுரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான பிரதிகளை வழங்கும் கட்டணம் 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டணம் தற்போது 1,150 ரூபாவாக காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *