புத்தளம் – மதுரங்குளி மல்லம்பிட்டிய பகுதியில் இன்று பகல் கொங்ரீட் தூண் உடைந்து கீழே வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி – மல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மதுரங்குளி மல்லம்பிட்டி பகுதியில் உள்ள பழைய தைக்கா பள்ளியின் கூரை உடைக்கும் வேலை நேற்று (09) முதல் முன்னடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், உயிரிழந்த நபர் இன்று குறித்த தாக்கம் பள்ளியின் மேல் கூலைப்பகுதியில் இருந்த கொங்கிரீட் தூணை உடைக்கும் போது அதில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மீது அந்த கொங்கிரீட் தூண் உடைந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் அனர்த்தத்தின் போது அங்கு வேலை செய்துகொண்டிருந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், அங்கு வருகை தந்த பொலிஸார் கள விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் திடீர் மரண விசாரனை அதிகாரி பீ.எம்.ஹிஷாம், சம்பவ இடத்தில் மரண விசாரணையை நடத்தியதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.