• Sun. Oct 12th, 2025

6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற திட்டம்

Byadmin

Jan 11, 2023

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் நாட்டின் கடல் சூழல் பாதிப்பு இழப்பீடு குறித்து விசாரிக்க நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி, சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர அதன் அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர்களுக்கு ​நேற்று (10) கையளித்தார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இது தொடர்பான அறிக்கையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

இந்த நிபுணர் குழுவில் 40 பிரதிநிதிகள் உள்ளனர். அங்கு இணைத் தலைவர்களாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பின் படிப்புத் துறையின் பீடாதிபதி பேராசிரியர் அஜித் டி சில்வா மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரசாந்தி குணவர்தன உள்ளிட்ட பலர் உள்ளனர்.

கப்பல் விபத்து தொடர்பாக ஒன்றரை ஆண்டுகளாக இந்த குழு பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்கள்.

அங்கு பேசிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பின்வருமாறு கூறினார்:

இந்த நாட்டின் மிகப்பெரிய கப்பல் விபத்து எம் . வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து மூழ்கியது ஆகும்.இந்த கப்பல் விபத்து காரணமாக இந்நாட்டின் கடற்கரை மற்றும் கடலோர சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடாக நாங்கள் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி அதை எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த நிதி மதிப்புக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. இந்த இழப்பீடு நம் நாட்டு மக்களின் உரிமை. அந்த உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். நிபுணர் குழுவும் அதற்குத் தயாராக உள்ளது. எனவே, இதை நீடிக்க வேண்டிய தேவை இல்லை.

இந்த விபத்து தொடர்பாக தற்போது நம் நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன அது போல சிங்கப்பூரில் வழக்குத் தொடரவும் எதிர்பார்க்கிறோம். நடக்கும் சிங்கப்பூரில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அது நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன மேற்கொள்கின்றன. இது தொடர்பான கப்பலின் காப்புறுதியை திணைக்களம் மேற்கொள்கிறது நிறுவனத்துடனும் பேசி வருகிறோம். அந்த நிறுவனமும் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டுள்ளது என்று நம்புகிறோம். எப்படியிருந்தாலும் இந்த கப்பல் விபத்துக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது.

அங்கு உரையாற்றிய கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர பின்வருமாறு தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து உலகத்தில் மிகப்பெரிய கப்பல் விபத்து ஒன்று. இந்த விபத்தின் தாக்கம் பல தசாப்தங்களாக நீடிக்கும். எனவே, சுற்றுச்சூழல் ஆய்வுகள் மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும். இவை ஆய்வு செய்ய 40 நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவில் மேலும் 11 துணைக் குழுக்கள் உள்ளன இந்த நிபுணர் குழுவால் ஒன்றரை ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நாட்டில் உள்ள சில ஆய்வகங்களில் ஆய்வுகள் செய்ய முடியாது. பின்னர் வெளிநாடுகளில் இருந்து தேவையான ஆய்வுகள் செய்யப்பட்டன. இறந்த ஆமைகளுக்கு பிரேத பரிசோதனை நடத்த இத்தாலியின் பாதுவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை அறிவியல் நிறுவனம் தொடர்புடைய விசாரணைகள் ஒன்றாக நடத்தப்பட்டன.

இன்று சமர்ப்பிக்கப்பட்டது இரண்டாவது இடைக்கால அறிக்கையாகும். 2021 செப்டம்பர் 30 ஆம் திகதி ஆகும் போது முதலாவது இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது 2022 நவம்பர் மாதமாகும் போது நடந்திருக்கின்ற நிலைமை சம்பந்தமாகவாகும். கப்பல் இன்னும் எங்கள் கடல் எல்லைக்குள் இருக்கின்றது என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். கப்பலால் தொடர்ந்தும் சூழல் மாசடைதல் நடைபெறுகிறது. கப்பலை கரை ஏற்றி விட்டு அதன் சேத அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை தயாரிக்கும் போது, ​​ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைப்படி செய்ய வேண்டும். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் நாங்கள் செயல்படுகிறோம். இது படிப்படியாக நடக்க வேண்டிய ஒன்று. சர்வதேச முறைப்படி இந்த நிகழ்வு வழக்குகள் நடந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இலங்கையின் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் கூடுதல் ஆறு ஆண்டுகள் வரை அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம். வழக்கு பதிவு செய்ய ஒன்றரை வருடம் அவகாசம் உள்ளது. கப்பல் மீட்பு பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. கடல் நன்றாக இருந்தால் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் கப்பலை இறக்கிவிட முடியும் என்றார்.

இதன்போது கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் எம் ஜகத் குணசேகர அவர்களும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *