அவுஸ்திரேலியாவில் தற்போது திறமையான பணியாளர்களுக்கான தேவை காணப்படுவதாக விசேட குடிவரவு சட்டத்தரணி சுசந்த கடுகம்பல தெரிவித்துள்ளார்.
நாட்டில் திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு வேலை வாய்ப்புக்காக புலம்பெயர்ந்து செல்ல முடியும்.
திறமையான இடம்பெயர்வு, வணிக இடம்பெயர்வு, முதலாளியினால் வழங்கப்படும் விசாக்கள், குடும்பப் புலம்பெயர்தல் மற்றும் புகழ்பெற்ற அல்லது உலகளாவிய திறமையாளர் பிரிவுகளின் கீழ் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.