உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய கட்டளையை மீறியதன் மூலம் ஆணைக்குழுவிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்தாமல் நிராகரிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் அதன் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.