• Sun. Oct 12th, 2025

எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

Byadmin

Aug 23, 2025

பொதுவாக நடைபயிற்சி என்பது ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமான சக்திகளை தரக்கூடிய சிறந்த உடற்பயிற்சியாகும்.

அதுவும் நாம் தினமும் நடைப்பயிற்சி செய்யும் போது, எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்து வந்தால், எந்தவித நோய்களின் தாக்கமும் இன்றி மிகவும் ஆரோக்கியமாக வாழலாம்.

நடைப்பயிற்சி செய்யும் போது, நமது உடம்பில் பிராண சக்திகள் மட்டும் உள்ளே சென்று, உடலில் உள்ள தீய சக்திகளை நமது கால் பாதங்களின் வழியாக வெளியேற்றுகிறது.

மேலும் நாம் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யும் போது, காலணியை அணியக் கூடாது. ஏனெனில் புவிஈர்ப்பு சக்தியின் மூலமாக மனிதனின் உடலில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் வெளியேறும்.

எட்டு வடிவ நடைப் பயிற்சியை செய்யும் போது, மண் தரை, சிமெண்டு தரை, தார்ரோடு, சிமெண்ட் ரோடு போன்ற இடங்களில் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும்.

இரவு உணவு சாப்பிட்ட பின் 45 நிமிடம் கழித்து, 20 நிமிடம் எட்டு வடிவில் நடைப்பயிற்சியை செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியை செய்யும் போது, முதலில் வடக்கில் இருந்து தெற்காக 10 நிமிடம், தெற்கில் இருந்து வடக்காக 10 நிமிடம் நடக்க வேண்டும்.

இதனால் நாம் சாப்பிட்ட உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகி அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைத்து, இரவில் ஆழ்ந்த நிலை தூக்கம் ஏற்படும்.

எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதால் தடுக்கப்படும் பிரச்சனைகள்
  • அஜீரணம்
  • மலச்சிக்கல்
  • இருதயம் சீராகும்
  • மூச்சு திணறல்
  • மூக்கடைப்பு
  • மார்புச்சளி
  • கெட்ட கொழுப்பு கரையும்
  • உடல் எடை குறையும்
  • மனஅழுத்தம் குறையும்
  • ரத்த அழுத்தம் குறையும்
  • தூக்கமின்மை
  • கண் பார்வை தெளிவாகும்
  • கெட்டவாயு வெளியேறும்
  • தலைவலி சரியாகும்
  • குதிகால், மூட்டு வலி, சரியாகும்
  • சர்க்கரை நோய் சரியாகும்
குறிப்பு

எட்டு வடிவில் நடைப்பயிற்சியை கருவுற்ற பெண்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்களை தவிர்த்து மற்ற அனைத்து வயதினர்களும் செய்து வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *